”இனி வீசா இல்லை!” - தூதரகம் மூடப்படுகிறது!!

18 பங்குனி 2025 செவ்வாய் 10:32 | பார்வைகள் : 1704
பிரான்சுக்குல் அல்ஜீரியாவுக்கும் இடையே இராஜதந்திர முறுகல் நிலை முற்றியுள்ளதை அடுத்து, அந்நாட்டவர்களுக்கு வழங்கப்படும் வீசாக்களை இரத்துச் செய்ய உள்ளதாக அமைச்சர் Gérald Darmanin அறிவித்துள்ளார்.
பிரான்சுக்குள் அகதிகளாக நுழைந்துள்ள அகதிகளுக்கும், வீசாக்கள் பெற்று வருபவர்களுக்கும் பிரான்சுக்கான வீசாக்கள் வழங்குவதை நிறுத்த உள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். மேலும், அல்ஜீரியாவில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தை மூடிவிட்டு, தூதரை நாட்டுக்கு திரும்பி அழைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்று மார்ச் 18, செவ்வாய்க்கிழமை தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று உரையாடிய அமைச்சர் Gérald Darmanin, அதன் போதே இதனைக் குறிப்பிட்டார்.