Paristamil Navigation Paristamil advert login

ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கர் மகன் ?

 ஹீரோவாக அறிமுகமாகும் ஷங்கர் மகன் ?

18 பங்குனி 2025 செவ்வாய் 14:55 | பார்வைகள் : 273


பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் ஒரு காலத்தில் சக்சஸ்புல் இயக்குனராக வலம் வந்தாலும் சமீப காலமாக அவர் இயக்கிய படங்கள் வரிசையாக தோல்வியை சந்தித்து வருகின்றன. கடைசியாக அவர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வியை சந்தித்தன. இதனால் அவரின் மார்க்கெட் மளமளவென சரிந்துள்ளது. 

இயக்குனர் ஷங்கருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா சினிமா பக்கமே தலைகாட்டாமல் உள்ளார். அதே நேரம் யாரும் எதிர்பார்க்காத விதமாக ஷங்கரின் இளைய மகள் அதிதி, விருமன் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடித்தார். இந்த இரண்டு படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட்டான நிலையில், அடுத்தடுத்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

சமீபத்தில் ஷங்கரின் மகன் அர்ஜித்தும் சினிமாவில் நுழைந்துள்ள தகவல் வெளியானது. அதன்படி அவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருவதாக கூறப்பட்டது. அவர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள மதராஸி படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார் அர்ஜித். அதேபோல் ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்திலும் அவர் உதவி இயக்குனராக பணியாற்றியதாக ஷங்கரே பேட்டி ஒன்றில் கூறி இருந்தார்.

இந்த நிலையில், தற்போது கிடைத்துள்ள லேட்டஸ்ட் தகவல்படி ஷங்கர் மகன் அர்ஜித் விரைவில் கோலிவுட்டில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளாராம். அவர் ஹீரோவாக நடிக்க உள்ள படத்தை பிரபுதேவா இயக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழில் விஜய்யை வைத்து போக்கிரி, வில்லு மற்றும் ஜெயம் ரவி நடித்த எங்கேயும் காதல் போன்ற படங்களை இயக்கிய பிரபுதேவா நீண்ட இடைவெளிக்கு பின் இப்படத்தின் மூலம் கம்பேக் கொடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்