Paristamil Navigation Paristamil advert login

Château de Montcornet - முதலாம் நூற்றாண்டு பொக்கிஷம்!!

Château de Montcornet - முதலாம் நூற்றாண்டு பொக்கிஷம்!!

13 சித்திரை 2017 வியாழன் 10:30 | பார்வைகள் : 18532


ரொம்ப பழமையான இடங்களுக்குச் செல்வதற்கு சிலருக்கு அலாதி பிரியம். அட... நம் அரசுக்கே பழைமை வாய்ந்த பாரம்பரிய கட்டிடங்களை பாதுகாப்பதில் அப்படி ஒரு விருப்பம்... பரிசுக்குள்  பல கட்டிடங்கள் இப்படி நிறைந்து இருக்கின்றன. இதோ... இன்றைய பிரெஞ்சு புதினத்தில்... பிரான்சில் உள்ள ஒரு 'கோட்டை'  குறித்து பார்க்கப்போகிறோம். இது முதலாம் நூற்றாண்டுக் கோட்டை!!
 
ஆயிரம் வருஷங்கள் ஆச்சா?? அட ஆமா.. Ardennes மாவட்டத்தின்  Montcornet பகுதியில் உள்ளது இந்த Château de Montcornet. அந்த நகரத்தின் அடையாளமே இந்த கோட்டை தான். Montcornet நகரத்தின் முதல் குடியேற்றவாதிகள் உருவாக்கியதாக சிலபல ஆதாரங்கள் சிக்கியுள்ளன. 
 
பின்னர், இந்த கோட்டை பலருக்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டில் Miles de Noyer குடும்பத்துக்கும், 1440 களில் Antoine I de Croy  குடும்பத்தினருக்கும் கைமாறியது. அந்த சமயத்தில் இந்த கோட்டை மேலும் விரிவு படுத்தி கட்டப்பட்டது. 
 
கோட்டை கட்டப்பட்டு, இங்கு பாதுகாப்பாக வாழ்ந்தவர்கள் என்றோ... யுத்தத்தில் பாரிய பங்கு வகித்தது என்றோ வரலாறுகள் இருப்பதாக தெரியவில்லை. 15 ஆம் நூற்றாண்டுகளில் எல்லாம் கோட்டை சிதைவுறத்தொடங்கி விட்டது. 
 
சிதைவுற்ற இந்த கோட்டைக்குள் எலும்புகள், மண் பாண்டங்கள், பண்டைய கலைப்படைப்புக்கள் என பலதும் ஆராய்ச்சியாளர்களின் கைகளில் சிக்கியிருக்கின்றன. அப்போது நாணய பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
1926 ஆம் ஆண்டு பிரெஞ்சு அமைச்சு, இந்த கோட்டையை  Monument historique ஆக அறிவித்தது. 
 
பாசி படிந்த பழைய கட்டிடத்தை காண ஆர்வமாக இருந்தால் ஒரு தடவை  சென்று வரலாமே? இதோ முகவரி - Ardennes Natural Regional Park, 11 Terre Cadet, 08090 Montcornet, France

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்