Paristamil Navigation Paristamil advert login

பெருவில் அவசரகால நிலை பிரகடனம்

பெருவில் அவசரகால நிலை பிரகடனம்

19 பங்குனி 2025 புதன் 04:55 | பார்வைகள் : 1040


பெருவில் பிரபல பாடகரான பால் புளோரஸ்  (16) கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டம் பாரிய கலவரமாக வெடித்துள்ள நிலையில் அந்நாட்டின் ஜனாதிபதி டினா போலுவார்டே (Dina Boluarte) தலைநகர் லிமாவில் அவசர கால நிலையை அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.
 

குறித்த அவசர கால நிலை உத்தரவு எதிர்வரும் 30 நாட்களுக்கு நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 பெருவில் அண்மைக்காலமாக வன்முறைச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக கடந்த ஜனவரி மாதம் 1 முதலாம் திகதி முதல் மார்ச் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 459 கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 

இந்நிலையில் அந்நாட்டின் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் உட்துறை அமைச்சர் ஜுவான் ஜோஸ் சாண்டிவானெஸுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கோரியுள்ளனர் எனவும், இது தொடர்பான வாக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் எனவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
 

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்