தென் அமெரிக்காவில் புதிய வகை வைரஸ் - மனிதர்களுக்கு பரவுமா?

19 பங்குனி 2025 புதன் 05:06 | பார்வைகள் : 268
தென் அமெரிக்காவில் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்திய கொரோனாவுக்கு இணையாக இது இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. வரலாறு காணாத அளவுக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே பிரேசில் நாட்டிலும் இப்போது வௌவால்களில் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதிய வகை கொரோனா வைரஸ் ஏற்கனவே மோசமான பாதிப்பை ஏற்படுத்திய மெர்ஸ் (MERS) வைரஸ்க்கு இணையாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மெர்ஸ் என்ற ஒரு வகை கொரோனா வைரஸ் கடந்த 2012ம் ஆண்டு முதலில் சவுதி அரேபியாவில் அடையாளம் காணப்பட்டது.அப்போது சுமார் 850க்கும் மேற்பட்டோர் இதனால் உயிரிழந்தனர்.
மேலும், 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவியிருந்தது. இந்த புதிய கொரோனா வைரஸின் மரபணு வரிசை, சுமார் 72 சதவீதம் மெர்ஸ் வைரஸின் மரபணுவை போல இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
இந்த புதிய வகை வைரஸ் பிற விலங்குகளை பாதிக்குமா அல்லது மனிதர்களை தாக்குமா என்பது குறித்து ஆய்வாளர்கள் விரிவான ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளனர்.