50 வருடங்களின் பின் குழந்தை பெற்றுக்கொண்ட அதிசய கிராமம்!!
12 சித்திரை 2017 புதன் 14:30 | பார்வைகள் : 18164
Auge எனும் ஒரு குக் கிராமம்... இந்த கிராமம் கிட்டத்தட்ட கைவிடப்பட்ட கிராமம்... கடந்த ஐம்பது ஆண்டுகளாக இருந்த ஒரு சாபக்கேடு.. சமீபத்தில் முடிவுக்கு வந்தது. ஆம்... ஐம்பது ஆண்டுகளின் பின்னர் முதன்முறையாக இங்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
அட... நீங்கள் முந்தைய பத்தியில் வாசித்தது உண்மைதான். மிக சிறியதும்... மிக அழகும் ஆனது இந்த கிராமம்... Creuse மாவட்டத்தில் உள்ள இந்த கிராமத்தில் மொத்தமே 105 பேர்கள் தான்... அரை நூற்றாண்டு சாபம் இந்த கிராமத்தில் ஒரு புது குழந்தை பிறக்கவில்லை என்பது.
பிறந்த அந்த குழந்தை... அந்த கிராமத்து அரச அலுவலகத்தில் பதியப்பட்ட முதல் பெயர் கடந்த ஐம்பது ஆண்டுகளின் பின்னர்... பதிவு புத்தகத்தை தூசு தட்டி எடுத்துள்ளார்களாம்.
தவிர, பிறந்த குழந்தை அந்த கிராமத்தில் உள்ள ஒரு அழகான பூங்காவில்.. நள்ளிரவில் பிறந்துள்ளது. குழந்தை பிறந்து நான்கு நாட்களின் பின்னர் பதிவலகத்துக்கு எடுத்து வந்துள்ளனர். கிராமத்து முதல்வருக்கு பெரும் சந்தோசம். இந்த குழந்தை பிறப்பை பெருமையோடு கொண்டாடுகின்றனர்.
இந்த கிராமத்தின் மக்கள் தொகை எப்போதுமே 500 ஐ தொட்டதில்லை. 1800 ஆண்டுகளில் 105 பேர் இருந்தனர். அதன் பின்னராக 1887 களில் 400 சொச்சம் மக்கள் வசித்தனர். இதுவே இக்கிராமத்தில் வசித்த அதிகூடிய மக்கள் தொகை ஆகும்.
அதன் பின்னராக, தற்போது 105 பேர் வசிக்கின்றனர். நம்பிக்கை எனும் ஒளிக்கீற்றே இல்லாமல் இருந்த இந்த கிராமத்தினருக்கு... புதிய வரவான இந்த குழந்தை மொத்த கிராமத்தினருக்கே வரப்பிரசாதம் என்கிறார்கள்!!