மேக் இன் இந்தியாவால் நல்ல பலன்: மத்திய அமைச்சர் நிர்மலா பெருமிதம்

19 பங்குனி 2025 புதன் 11:58 | பார்வைகள் : 2063
ராஜ்யசபாவில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய நிதி அமைச்சருமான நிர்மலா சீதாராமன் கூறியதாவது:
மேக் இன் இந்தியா திட்டம் உண்மையில் நல்ல பலன்களை தருகிறது. இதனால் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்துள்ளது. ராணுவ தளவாட பொருட்களை இறக்குமதி செய்து வந்த நம் நாடு, இத்திட்டத்தால், தற்போது அவற்றை ஏற்றுமதி செய்து வருகிறது. இத்திட்டம் நாட்டின் தொழில் துறை மற்றும் ஏற்றுமதி திறன்களை வலுப்படுத்துகிறது.
காங்., தலைமையிலான ஐ.மு., கூட்டணி ஆட்சியில், தாராள வர்த்தக ஒப்பந்தத்தில் பல்வேறு குளறுபடிகள் இருந்தன. அவற்றை நாங்கள் தற்போது சரிசெய்து வருகிறோம். மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறை, அம்மாநிலத்தின் பொருளாதாரத்தை மிகவும் பாதித்துள்ளது. அம்மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்.
அங்கு இயல்புநிலையை கொண்டுவர நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். மணிப்பூர் கலவரத்தில் எதிர்க்கட்சிகள் பழிசுமத்துவதை விட்டு விட்டு, அமைதி திரும்ப அரசுக்கு உதவ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
6 நாள்கள் முன்னர்
நினைவஞ்சலி

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025