Paristamil Navigation Paristamil advert login

5 நிமிடத்தில் மின்சார வாகனத்தை சார்ஜ் செய்யலாம் - சீன நிறுவனத்தின் புதிய கண்டுப்பிடிப்பு

5 நிமிடத்தில் மின்சார வாகனத்தை சார்ஜ் செய்யலாம் - சீன நிறுவனத்தின் புதிய கண்டுப்பிடிப்பு

19 பங்குனி 2025 புதன் 10:07 | பார்வைகள் : 678


5 நிமிடம் மின்சார காரை சார்ஜ் 400 கிமீ பயணம் செய்யும் தொழில்நுட்பத்தை BYD நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மின்சார வாகனத்தின் பயன்பாடு உலகளவில் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த வாகனங்களை சார்ஜ் செய்ய அதிக நேரம் தேவைப்படும்.

இந்நிலையில், 5 நிமிடத்தில் மின்சார வாகனத்தை சார்ஜ் செய்யும் அமைப்பை சீனாவை சேர்ந்த பிரபல மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான BYD உருவாக்கியுள்ளது.

இதன் மூலம் மின்சார வாகனத்தை 5 நிமிடங்களில் சார்ஜ் செய்து அதன் மூலம் 400 கிமீ தூரத்திற்கு பயணம் செய்ய முடியும்.

இதற்காக 1000kW சார்ஜிங் திறனுடன் 'SUPER E PLATFORM' என்ற தொழில்நுட்பத்தை BYD நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இதன் போட்டி நிறுவனமான டெஸ்லா, 500kW சார்ஜிங் வேகத்தை வழங்கி வரும் நிலையில், BYD அதனை விட இரு மடங்கு வேகத்தை வழங்குகிறது.

தனது Han L sedan மற்றும் Tang L SUV மாடல் வாகனங்களில் இந்த SUPER E PLATFORM தொழில்நுட்பம் இருக்கும் என BYD அறிவித்துள்ளது.

மின்சார வாகனங்களில் சார்ஜ் செய்ய அதிக நேரம் எடுக்கும் நிலையில், பெட்ரோல் வாகனங்களில் 5 நிமிடத்தில் பெட்ரோல் நிரப்புவது போல், இனி 5 நிமிடத்தில் காரை சார்ஜ் செய்ய முடியும் என BYD நிறுவனத்தின் நிறுவனர் Wang Chuanfu தெரிவித்துள்ளார்.

மேலும், சீனா முழுவதும் 4,000 க்கும் மேற்பட்ட அதிவேக சார்ஜிங் நிலையங்களை உருவாக்குவதற்கான தனது நோக்கத்தையும் அறிவித்துள்ளது.

இந்த புதிய அறிவிப்பிற்கு பின்னர், BYD நிறுவனத்தின் பங்கு வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது.  

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்