மாவீரன் நெப்போலியனுக்கு எதிரான பத்திரிகை!
10 சித்திரை 2017 திங்கள் 11:30 | பார்வைகள் : 18439
பத்திரிகைகள் எப்போதும் சுதந்திரங்களையே விரும்புகின்றன. இது இன்றல்ல.. பத்திரிகை துறை ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்தே... தொன்று தொட்டு வருகிறது. இன்றைய பிரெஞ்சு புதினத்தில் பிரான்சின் மிக பழமையான பத்திரிகை ஒன்றின் சுருக்கமான வரலாறு உங்களுக்காக..!!
Journal des débats பத்திரிகை பிரான்சில் 1789 ஆம் ஆண்டு முதல் 1944 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதிகளில் வெளிவந்து சக்கை போடு போட்ட பத்திரிகை ஆகும். தற்போது இப்பத்திரிகை வெளிவருவதில்லை என்ற போதும், பல்வேறு பெயர்களில் இதுவரை வெளிவந்துள்ளது. பிரெஞ்சு புரட்சியின் போது இப்பத்திரிகைக்கு Journal des Débats et des Décrets என பெயரிடப்பட்டிருந்தது.
நாற்பது ஆண்டு காலமாக Bertin குடும்பத்தினரின் ஒரு அங்கமாக இந்த பத்திரிகை விளங்கியது. பின்னர் பிரான்சின் முதலாம் பேரரசுவான நெப்போலியனுக்கு எதிராக விளங்கியது இப்பத்திரிகை. இதனால் தனது பெயரை Journal de l'Empire என மாற்றிக்கொண்டது.
இதென்ன பிரம்மாதம்... Bourbon Restoration சமயத்தில்... (1813 ஆண்டு) l'Empire ஆக இருந்த பெயரை Journal des Débats Politiques et Littéraires என, பத்திரிகை அளவே முடிந்துவிடும் அளவுக்கு நீ..ளமான பெயரை வைத்து வெளியிட்டது.
அதன் பின்னர் பல்வேறு யுத்தங்கள், போர்கள் என எதுவந்தபோதும்... பத்திரிகை தொடர்ந்து வரா வாரம் வெளியாகிக்கொண்டே இருந்தது. அரசியல், இலக்கியம், சமூகம் என பல ஆழகான கட்டுரைகளை வரைந்து தள்ளி.. சக பத்திரிகைகள் ஊற்றெடுத்த காலத்திலும் விற்பனையில் சாதனை படைத்தது.
ஜெர்மன் ஆக்கிரமிப்பு சமயத்தில் கூட பத்திரிகை தொடர்ந்து வெளியாகிக்கொண்டே தான் இருந்தது. நல்லவேளையாக அதற்கு ஏற்றால் போல் தனது பெயரை மாற்றவில்லை!! இப்படி நீண்ட காலமாக தனது சேவையை மேற்கொண்டிருந்தாலும், Journal des débats எனும் முதல் பெயரே நிரந்தரமாக இருந்தது.
இப்படி, கமல்ஹாசனுக்கு பின்னர் அதிக 'கெட்டப்' போட்டது போன்ற இந்தப் பத்திரிகை 1944 ஆம் ஆண்டு தன் சேவையை சிலபல காரணங்களுக்காக நிறுத்திக்கொண்டது!!