எலான் மஸ்குக்கு அமெரிக்க பெடரல் நீதிமன்றம் தடை

20 பங்குனி 2025 வியாழன் 05:31 | பார்வைகள் : 156
அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட் நிறுவனத்தை மூடும் நடவடிக்கைக்கு, எலான் மஸ்குக்கு அமெரிக்க பெடரல் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
ஊழியர்கள் தொடர்ந்த வழக்கை விசாரித்த, மேரிலேண்ட் மாவட்ட நீதிபதி தியோடர் சுவாங், யு.எஸ்.எய்ட் நிறுவனத்தை மூடும் அதிபர் டிரம்பின் முடிவு, அமெரிக்க அரசியலமைப்புச் சட்ட விதிகளை மீறும் செயல் என்று தெரிவித்தார்.
சர்வதேச அளவில் சேவையாற்றி வரும் யு.எஸ்.எய்ட் நிறுவன ஊழியர்களை மீண்டும் அழைத்து பணிகளைத் தொடர வேண்டுமென்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.