Paristamil Navigation Paristamil advert login

டெஸ்லா டீலர்ஷிப் தீவைப்பு - வன்முறையாக மாறிவரும் எலோன் மஸ்க் மீதான எதிர்ப்பு

டெஸ்லா டீலர்ஷிப் தீவைப்பு -  வன்முறையாக மாறிவரும் எலோன் மஸ்க் மீதான எதிர்ப்பு

20 பங்குனி 2025 வியாழன் 09:07 | பார்வைகள் : 980


லாஸ் வேகாஸில் டெஸ்லா டீலர்ஷிப்பில் தீவைத்த தாக்குதல் நடத்தப்பட்டதற்கு எலோன் மஸ்க் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் எலோன் மஸ்க் மீதான எதிர்ப்பு, வன்முறையாக மாறி வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, லாஸ் வேகாஸில் உள்ள ஒரு டெஸ்லா டீலர்ஷிப்பில் (Tesla Collision Center) உள்ள பல்வேறு கார்களுக்கு தீவைக்கப்பட்டடது.

மோலோடோவ் காக்டெயில் (Molotov Cocktail) குண்டுகளும், துப்பாக்கியும் பயன்படுத்தி, அடையாளம் தெரியாத நபர் இத்தாக்குதலை மேற்கொண்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம், எலோன் மஸ்க் மீது தொடர்ச்சியாக அதிகரித்து வரும் எதிர்ப்பின் ஒரு பகுதியாகவே இருக்கலாம் என கூறப்படுகிறது.

மஸ்க், அமெரிக்காவில் அரசாங்க செலவுகளை குறைப்பதற்காக ட்ரம்ப் நிர்வாகத்தில் வேலைசெய்து வருகிறார், இதனால் அரசு துறையில் பெருமளவிலான பணிநீக்கம் நடந்துள்ளது. இதற்கு எதிராக மக்களிடையே பெரும் கோபம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்தாக்குதலில் குறைந்தது 5 டெஸ்லா கார்கள் சேதமடைந்துள்ளன, அதில் இரண்டு முழுவதுமாக தீப்பிடித்து எரிந்துவிட்டன.

டீலர்ஷிப்பின் கதவின் மீது "RESIST" (எதிர்ப்பு) என்று எழுதப்பட்டிருந்தது.

இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை, பொலிசார் குற்றவாளியை தேடி வருகின்றனர்.

FBI-யின் "Joint Terrorism Task Force" இந்த தாக்குதலை தீவிரமாக விசாரித்து வருகிறது.

எலோன் மஸ்க் தனது சமூக ஊடகத்தளமான X-ல் , இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்தார். "இந்த அளவிலான வன்முறை முற்றிலும் தவறானது. டெஸ்லா ஒரு எலக்ட்ரிக் கார் நிறுவனம், இது எந்த விதத்திலும் இந்த தாக்குதலுக்கு ஆளாகக்கூடியதல்ல" என்று அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவத்திற்கு முன்பே, டெஸ்லா பங்கின் மதிப்பு 15% குறைந்து, கடந்த அக்டோபர் 2024-இல் இருந்த நிலையை விட மிகவும் குறைந்துள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்