உலகின் விலையுயர்ந்த நாயை ரூ.50 கோடிக்கு வாங்கிய நபர்... ஏன் தெரியுமா?

20 பங்குனி 2025 வியாழன் 09:23 | பார்வைகள் : 536
உலகின் மிக விலையுயர்ந்த நாய் எனக் கூறப்படும் Wolf Dog-யை நபர் ஒருவர் ரூ.50 கோடிக்கு வாங்கியுள்ளார்.
பெங்களூருவைச் சேர்ந்த நாய் வளர்ப்பாளர் ஒருவர் அரிய வகை ஓநாய் நாயை வாங்க 50 கோடி ரூபாய் செலவிட்டுள்ளார். இதன் மூலம் அது உலகின் மிகவும் விலையுயர்ந்த இனமாக மாறியுள்ளது.
இது ஓநாய் மற்றும் காகசியன் ஷெப்பர்ட் இனத்திற்கு இடையிலான கலப்பினமாகும். இந்த தனித்துவமான விடயத்தினால், செல்லப்பிராணி வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இந்திய நாய் வளர்ப்போர் சங்கத்தின் தலைவரான சதீஷ், இந்த அசாதாரண இனத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவதை தனது குறிக்கோளாகக் கொண்டுள்ளார்.
இவர், 150-க்கும் மேற்பட்ட வெவ்வேறு இனங்களைச் சேர்ந்த நாய்களை வளர்த்து வருகிறார். இதனை பராமரிப்பதற்கு 7 ஏக்கர் பண்ணையை வைத்துள்ளார்.
6 பணியாளர்கள் வைத்து நாய்களை பராமரித்து வருகிறார். மேலும், நாய்களை பார்க்க வருபவர்களிடம் இருந்து கட்டணம் வசூலித்து வருகிறார்.
இந்த நிலையில் தான் உலகின் விலையுயர்ந்த நாயான Wolf Dog விற்பனைக்கு வந்தது. இதனை இவர் ரூ.50 கோடிக்கும் மேல் பணம் கொடுத்து வாங்கியுள்ளார்.
பிரபல நாய் வளர்ப்பாளரான இவர், எட்டு மாத வயதுடைய கலப்பின ஓநாய் நாய் கேடபோம்ஸ் ஒகாமியை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்து இந்தியாவிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
5 கிலோ எடை கொண்ட இந்த நாய், ஒவ்வொரு நாளும் 3 கிலோ பச்சை இறைச்சியை சாப்பிடுகிறது. இது குறித்து சதீஷ் கூறுகையில், "நாய்கள் மீது பிரியம் காரணமாக இந்த நாயை 50 மில்லியன் டொலர் கொடுத்தி வாங்கியுள்ளேன்.
இந்த நாய் அரிதானது என்பதால் இதற்காக பணத்தை செலவு செய்கிறேன். மக்களும் இதனை ஆர்வமாக பார்க்க வருகின்றனர்.
நாய்களுடன் செல்ஃபிகள் மற்றும் புகைப்படங்கள் எடுப்பதற்கு கூட்டம் கூட்டமாக மக்கள் வருகின்றனர். மேலும் ஹாலிவுட் நட்சத்திரங்களை விட அதிக கவனம் கிடைக்கிறது.
பல கூட்டங்களுக்கு நாய்களை அழைத்துச் செல்லும்போது அவற்றை பார்வையிட 30 நிமிடங்களுக்கு, 2,800 டொலர் முதல் ஐந்து மணி நேரத்திற்கு 11,700 டொலர் வரை சம்பாதிக்கிறேன்" என்றார்.