Paristamil Navigation Paristamil advert login

கொல்கத்தாவில் நடைபெறும் IPL போட்டியை மாற்ற திட்டம்

கொல்கத்தாவில் நடைபெறும் IPL போட்டியை மாற்ற திட்டம்

20 பங்குனி 2025 வியாழன் 09:37 | பார்வைகள் : 406


ஏப்ரல் 6ஆம் திகதி கொல்கத்தாவில் நடைபெறும் IPL போட்டியை வேறு இடத்திற்கு மற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 18வது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 22 ஆம் திகதி தொடங்கி மே 25 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.

கொல்கத்தாவின் ஈடன் காடன் மைதானத்தில் நடைபெற உள்ள முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதவிருக்கின்றன.

இந்த நிலையில், ஏப்ரல் 6ஆம் திகதி நடைபெற உள்ள கொல்கத்தா மற்றும் லக்னோ அணிக்கு இடையேயான போட்டியை, கொல்கத்தாவில் இருந்து வேறு மைதானத்திற்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அன்று ராமநவமி என்பதால் அன்றைய தினம் 20,000 க்கும் மேற்பட்ட ஊர்வலங்களை நடத்த உள்ளதாக பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி அறிவித்துள்ளார்.

அதற்கான பாதுகாப்புகளை அளிக்க வேண்டியுள்ளதால், மைதானத்திற்கு போதுமான பாதுகாப்பு வழங்க முடியாது என காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

இதனால் போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற, மேற்குவங்க கிரிக்கெட் வாரியத்திற்கு காவல்துறை பரிந்துரை செய்துள்ளது.

"மைதானத்தில் 65,000 கூடுவார்கள் என்பதால் தகுந்த பாதுக்காப்பு இல்லாமல் போட்டியை நடத்துவது சாத்தியமற்றது. இது தொடர்பான இறுதி முடிவை பிசிசிஐ எடுக்கும்" என மேற்குவங்க கிரிக்கெட் வாரிய தலைவர் சினேகாசிஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.  

அப்படி மாற்றப்பட்டால் லக்னோஅணியின் சொந்த மைதானமான லக்னோ பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் மைதானத்திற்கு மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஆண்டு ராமநவமி அன்று கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு மைதானத்திற்கு மாற்றப்பட்டது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்