Trafalgar யுத்தம்! - பிரெஞ்சு தேசத்தின் சோக வரலாறு!!
8 சித்திரை 2017 சனி 15:30 | பார்வைகள் : 18493
ஒரு பக்கம் பிரித்தானியாவின் கப்பல் படையினர்... மறுபக்கம் பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் இராச்சியத்தின் கப்பல்கள்.. அத்லாண்டிக் சமுத்திரம்... யுத்தம் ஆரம்பித்தது!!
எத்தனையோ யுத்தங்கள் போல், இதுவும் வீணான ஒரு யுத்தம் தான். பிரித்தானியாவுக்கும், ஸ்பெயினுக்கும் இந்த யுத்தத்துக்கு பின்னால் தனி தனி காரணங்கள் இருந்தன. பிரான்சுக்கு தனிப்பட்ட சில 'இலாபங்கள்' இருந்தன. அத்லாண்டிக் கடல்பரப்பின் ராஜா யார் என்பதே இந்த சண்டையின் 'சுருக்கமான காரணம்!' யுத்தம் ஸ்பெயினுக்கு சொந்தமான Cape Trafalgar கடல்பரப்பில், ஒக்டோபர் 21, 1805 ஆம் ஆண்டு ஆரம்பித்தது.
பிரித்தானியாவிடம் 33 போர்க்கப்பல்கள் இருந்தன. இதில் 27 கப்பல்கள் கடலில் வரிசை கட்டி நின்றது. மீதி 6 கப்பல்கள் யுத்தத்துக்கு தயாரான நிலையில் அவர்கள் எல்லைக்குள் நின்றிருந்தது. பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினிடம் 41 கப்பல்கள் இருந்தன. இதில் கடலில் யுத்தத்துக்கு தயாராக 33 கப்பல்களும் பின்னால் 8 கப்பல்களும் நின்றன.
கப்பல்களில் இருந்து வெடிகுண்டுகள் பறந்தன. துப்பாக்கிச்சூடுகள்... வெடி முழக்கங்கள் என கடல்பரப்பே கலோபரம் ஆகியிருந்தது. கப்பல்கள் உடைந்து நொருங்கி மூழ்குவதும்... உயிரிழப்புக்கள் ஏற்படுவதும் என யுத்தம் நீண்டது!! இரு தரப்பிலும் கணிசமான அளவு உயிர்கள் காவு வாங்கிக்கொண்டிருந்தது. பிரித்தானியாவின் சக்கரவர்த்தி Viscount Nelson ஒரு திட்டம் தீட்டுகிறார். Nelson's plan!!
கட்டம் கட்டி, சரமாரியாக தாக்குதல் நடத்தி யுத்தத்தை ஒரு வழிக்கு கொண்டுவருகிறார். பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் தரப்பில் உயிரிழப்புக்கள் அதிகரிக்கத் தொடங்கின. பிரான்சின் கப்பல்கள் பிரித்தானிய படையினரால் கைப்பற்றப்படுகின்றன. தொடர்ச்சியாக 10 கப்பல்கள் பிரித்தானிய படைகளிடம் தாரை வார்த்துவிட... போதாததற்கு ஒரு கப்பல் தரைமட்டமாக நொருங்கி மூழ்கியது.
யுத்தத்தின் முடிவில் பிரித்தானியா மாபெரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பிரித்தானிய படையில் 458 பேர்கள் உயிரிழந்தும் 1208 பேர் காயங்களுக்கு இலக்காகியும் இருந்தனர். பிரெஞ்சு படையினரில் 2218 பேர் உயிரிழந்தும், 1155 பேர் காயமடைந்திருந்தும் 4000 பேர் பிரித்தானிய படையினரிடம் சரண் அடைந்தும் இருந்தனர். ஸ்பெயின் படையினரில் 1025 பேர் உயிரிழந்தும், 1383 பேர் காயங்களுக்கு இலக்காகியும், 4000 பேர் பிரித்தானியாவிடம் சரண் அடைந்தும் இருந்தனர்.
யுத்தம் முடிவில் பிரான்சிடம் மொத்தம் 5 கப்பல்களே எஞ்சியிருந்தன. இந்த யுத்தம் ஒன்றுக்கும் உதவாதது என்பதை உணர்ந்திருந்தும்... வேறு பல யுத்தங்கள் 18 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இடம்பெற்றுத்தான் இருந்தன.