மார்செய் : வீதியில் சென்ற பலரை கண்மூடித்தனமாக தாக்கிய சாரதி!!

20 பங்குனி 2025 வியாழன் 15:37 | பார்வைகள் : 1556
வீதி விபத்து ஏற்பட்டதை அடுத்து, மகிழுந்து சாரதி ஒருவர் வீதியில் சென்ற பலரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார்.
மார்ச் 19, நேற்று புதன்கிழமை மாலை 4 மணி அளவில் இச்சம்பவம் மார்செயின் 4 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. Boulevard Rougier பகுதியில் பயணித்த மகிழுந்து ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியுள்ளது. அதை அடுத்து மகிழுந்து சாரதிக்கும் மோட்டார் சைக்கிள் செலுத்தியவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது.
இந்த வாக்குவாதம் உடனடியாக மோதலாக மாறியது. மகிழுந்து சாரதி மோட்டார் சைக்கிள் செலுத்தியவரை கத்தி ஒன்றினால் தாக்கியுள்ளார். அத்துடன் வீதியில் பயணித்த மேலும் சிலரையும் தாக்கியுள்ளார்.
மோட்டார் சைக்கிள் சாரதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதல் மேற்கொண்ட சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.