பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான முக்கிய ஊட்ட்சத்துக்கள்பற்றித் தெரியுமா?
20 பங்குனி 2025 வியாழன் 15:57 | பார்வைகள் : 7312
ஒரு பெண்ணுக்கு பிரசவத்திற்குப் பிறகு, உடலில் ஏற்படும் காயங்கள் மற்றும் வலிகளை தாங்க, மஞ்சள் ஒரு சிறந்த இயற்கை மருந்தாக செயல்படுகிறது. இதில் உள்ள விட்டமின்கள், பொட்டாசியம், மக்னீசியம் போன்ற தாதுப்பொருட்கள் உடல் உள்ளக, வெளிப்புற காயங்களை விரைவில் குணமாக்கி, வீக்கத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால், ஒரு டம்ளர் பசும்பாலில் சிறிதளவு மஞ்சள்தூள் கலந்து குடிப்பது உடல் நலத்திற்கு மிகுந்த பயனளிக்கும்.
பிரசவத்திற்குப் பிறகு, தாயின் உடலில் பல சத்துக்கள் குறைந்து, பலவீனம் ஏற்படும். அதே நேரத்தில், குழந்தைக்குத் தாய்ப்பால் வழங்கும் முக்கிய பொறுப்பையும் அவர் மேற்கொள்ள வேண்டும். எனவே, சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியமாகிறது.
பிரசவத்திற்குப் பிறகு நாளொன்றுக்கு 3 முதல் 4 அவுன்ஸ் புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளுவது நல்லது. தினமும் 4 முதல் 5 முறை பால், தயிர், பன்னீர் போன்றவற்றை உணவில் சேர்க்கலாம். ஆட்டிறைச்சி, கோழி இறைச்சி, மீன், முட்டை, பருப்பு, விதைகள் போன்றவை உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை வழங்கும்.
மேலும் விட்டமின் B-12 சரியான அளவு கிடைக்காமல் போனால் உடல் சோர்வு, எடை குறைதல், வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இரத்த ஓட்டத்தைச் சீராக்கும் தக்காளி, சிட்ரஸ் பழங்கள், உருளைக்கிழங்கு, பிரக்கோலி போன்றவற்றை உணவில் சேர்த்தால் தேவையான இரும்புச் சத்து மற்றும் விட்டமின் சி கிடைக்கும்.


























Bons Plans
Annuaire
Scan