Paristamil Navigation Paristamil advert login

சுகாதார காப்பீடு : €630 மில்லியன் யூரோக்கள் மோசடி!

சுகாதார காப்பீடு : €630 மில்லியன் யூரோக்கள் மோசடி!

20 பங்குனி 2025 வியாழன் 16:14 | பார்வைகள் : 1881


கடந்த 2024 ஆம் ஆண்டில் சுகாதார காப்பீடுகளில் (l'Assurance maladie) கிட்டத்தட்ட €630 மில்லியன் யூரோக்கள் மோசடி இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

போலியான மருந்துச்சீட்டுக்கள் மூலம் இந்த மோசடி இடம்பெற்றதாகவும், மோசடியில் ஈடுபட்ட பல மருத்துவர்கள், மருந்தகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மொத்தமாக €628 மில்லியன் யூரோக்கள் மோசடி செய்யப்பட்டதாகவும், இந்த தொகை சென்ற 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 35% சதவீதம் அதிகம் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

சென்ற 2023 ஆம் ஆண்டில் €500 மில்லியன் யூரோக்கள் மோசடி செய்யப்பட்டிருந்தது. 

சுகாதார காப்பீடுகளில் இடம்பெறும் மோசடிகளை தடுத்த 1,500 ஊழியர்கள் பணிபுரிகிறமை குறிப்பிடத்தக்கது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்