Paristamil Navigation Paristamil advert login

சிக்கன் சுக்கா!!

சிக்கன் சுக்கா!!

20 பங்குனி 2025 வியாழன் 16:26 | பார்வைகள் : 769


சிக்கனில் பல்வேறு வகையான உணவுகளை சமைத்து இருப்போம். பிரியாணி,65 ,பெப்பர் சிக்கன், என சொல்லிக் கொண்டே போகலாம். அத்தனை வகையான உணவுகளை ருசித்திருப்போம். அதில் ஒன்றுதான் சிக்கன் சுக்கா அதனை திண்டுக்கல் தலப்பாகட்டி ஸ்டைலில் செய்வது எப்படி என்று இங்கு பார்க்கலாம் வாங்க...

தேவையான பொருட்கள்..1/4கிலோ சிக்கன்,10 சின்ன வெங்காயம்,1டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்,2டீஸ்பூன் மிளகாய்த்தூள்,1டீஸ்பூன் சோம்பு தூள்,1டீஸ்பூன் சீரகத்தூள்,1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்,தேவையானஅளவு உப்பு,1டீஸ்பூன் சோம்பு,2 துண்டு பட்டை,ஒரு கொத்து கருவேப்பிலை,1டேபிள்ஸ்பூன் எண்ணெய்,சிறிதளவுகொத்தமல்லி இலை.

செய்முறை..ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு, பட்டை,சேர்த்து நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட், கருவேப்பிலை, சேர்த்து நன்றாக வதக்கவும்,....இஞ்சி பூண்டு பச்சை வாசனை போன பின்பு,மஞ்சள்தூள், சேர்த்து கழுவி வைத்த சிக்கன் துண்டுகளை, எண்ணெயில் இரண்டு நிமிடம் நன்றாக வதக்கவும்‌.

பின் அதனுடன் மிளகாய் தூள்,சோம்பு தூள், சீரகத்தூள்,மஞ்சள்தூள், தேவையான அளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்‌.

சிக்கன் வெந்து,எண்ணெய் பிரிந்து வரும் போது, கொத்தமல்லி தூவி, நன்றாக சுருள கிளறி இறக்கினால் சிக்கன் சுக்கா வறுவல் தயார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்