சஹாராவில் இருந்து மணற்புயல்.. மூன்றில் இரண்டு மாவட்டங்கள் பாதிப்பு!!

20 பங்குனி 2025 வியாழன் 19:14 | பார்வைகள் : 2891
சஹாராவில் இருந்து எழும் மணற்புயல் பிரான்சை தாக்க உள்ளது. இன்று வியாழக்கிழமை சில பகுதிகளிலும், நாளை மார்ச் 21 வெள்ளிக்கிழமை நாட்டின் மூன்றில் இரு மாவட்டங்களிலும் இந்த மணற்புயல் பதிவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
மத்திய தரைக்கடல் வழியாக பிரான்சுக்குள் நுழையும் இந்த மணற்புயல் வடகிழக்கின் Rhône மாவட்ட பள்ளத்தாக்கு
வழியாக நாட்டில் இருந்து வெளியேறும் எனவும், வானம் காவி நிறத்தில் காட்சியளிக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஒட்டுமொத்த தெற்கு மாவட்டங்களிலும் பெரும் தாக்கத்தைச் செலுத்தும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
முகக்கவசம் அணிதல், வீட்டின் கதவுகள், ஜன்னல்களை மூடி வைத்தல், காற்று சுத்திகரிப்பானை பயன்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்துமாறு கோரப்படுகிறது.