Paristamil Navigation Paristamil advert login

Gare Montparnasse - தோற்றமும் பின்னணியும்!!

Gare Montparnasse - தோற்றமும் பின்னணியும்!!

6 சித்திரை 2017 வியாழன் 10:30 | பார்வைகள் : 18805


அடடே.... நாம் அடிக்கடி சந்திக்கும் மிக நெருக்கமான தொடரூந்து நிலையமாச்சே... என புன்முறுவலோடு வாசிக்க ஆரம்பிக்கும் உங்களுக்கு... Gare Montparnasse பற்றி தெரியாத பல தகவல்கள் சொல்லப்போகிறோம்!!
 
பரிசின் 14 ஆம் 15 ஆம் வட்டாரங்களை ஊடறுத்து இருக்கும் இந்த தொடரூந்து நிலையம் பரிசின் ஆறாவது மிகப்பெரிய தொடரூந்து நிலையம் ஆகும். 
 
இந்த நிலையம் 1840 ஆம் ஆண்டு திறக்கப்பட்டு, 1852 ஆம் ஆண்டு மீள் நிர்மாணம் செய்யப்பட்டு, பின்னர் 1969 ஆம் ஆண்டு மீண்டும், முற்றாக மீள் நிர்மாணம் செய்யப்பட்டு... அதன் பின்னர் இன்றுவரை கம்பீரமாக இருக்கிறது நிலையம். 
 
ஒக்டோபர் 22 ஆம் திகதி, 1895 ஆம் ஆண்டு ஒரு சம்பவம் இடம்பெற்றது. தொடரூந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து இந்த தொடரூந்து நிலையத்தை இடித்துத் தள்ளிக்கொண்டு வெளியே வந்துவிட்டது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று மகா பிரசித்தம். (பிறிதொரு பிரெஞ்சு புதினத்தில் அது குறித்து எழுதுகிறோம்) 
 
பிரான்சின் மேற்கு, தென்மேற்கு மாவட்டங்களுக்கு ( Tours, Bordeaux, Rennes  Nantes போன்றவை) TGV சேவைகள் இந்த தொடரூந்து நிலையத்தின் முக்கிய சேவைகள் ஆகும். தவிர மெட்ரோ சேவைகளும் உள்ளடங்கல்!!
 
1840களில் இந்த நிலையம் Gare de l'Ouest எனும் பெயர்கொண்டு அழைக்கப்பட்டது. பின்னர் தான் பெயர் மாற்றம் கண்டது. 1848 தொடக்கம் 1852 வரையான காலப்பகுதிக்குள் கட்டப்பட்ட இரண்டாவது தொடரூந்து நிலையம் இதுவாகும்.
 
1990களில், தொடரூந்து நிலையத்தில் பல கடைகள் உணவகங்கள் என விஸ்தரித்து, வியாபாரம் மில்லியல்களில் புரண்டது. 2002 ஆம் ஆண்டு 50 மில்லியன் பயணிகளை சந்தித்து அசரடித்தது Gare Montparnasse.
 
அடுத்தமுறை நீங்கள் Gare Montparnasse செல்ல நேர்ந்தால்.. 'அடடே.. இந்த நிலையத்துக்கு பின்னால் இத்தனை விஷயங்களா?!' என ஆச்சரியப்படுவீர்கள்!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்