ரஷ்யாவுக்கு 'போர் நிறுத்தத்தில் விரும்பம் இல்லை' - ஜனாதிபதி மக்ரோன் சீற்றம்!!

21 பங்குனி 2025 வெள்ளி 06:10 | பார்வைகள் : 1955
போர் நிறுத்தத்தினையோ, அதில் கையெழுத்திடுவதிலயோ ரஷ்யாவுக்கு விரும்பம் இல்லை என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
பெல்ஜியத்தின் Brussels நகரில் நேற்று மார்ச் 20, வியாழக்கிழமை மாநாடு ஒன்று இடம்பெற்றது. அதில் வைத்தே ஜனாதிபதி மக்ரோன் இதனைக் குறிப்பிட்டார். "ரஷ்யாவுக்கு போர் நிறுத்தத்தில் ஈடுபடுவதில் முனைப்பு இல்லை. இந்த கட்டத்தில் அமைதியை உண்மையாக விரும்பவில்லை" என ஜனாதிபதி மக்ரோன் மிக காட்டமாகத் தெரிவித்தார்.
யுக்ரேன்-அமெரிக்க அமைதி உடன்படிக்கை குறித்து ரஷ்யா 'முக்கியமான விடயங்களை தீர்க்கவேண்டும்' என குறிப்பிட்டிருந்தது. இந்த அறிவிப்பின் பின்னரே ஜனாதிபதி மக்ரோன் இதனைக் குறிப்பிட்டார்.