■ பரிசில் உச்சிமாநாடு.. செலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் பங்கேற்பு!!

21 பங்குனி 2025 வெள்ளி 08:09 | பார்வைகள் : 2466
யுக்ரேன் அதிபர் செலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் உச்சிமாநாடு ஒன்று பரிசில் இடம்பெற உள்ளது.
Brussels நகரில் வைத்து இதனை ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்தார். 'மார்ச் 27' வியாழக்கிழமை இந்த உச்சிமாநாள் பரிசில் இடம்பெறும் எனவும், "யுக்ரேனுக்கு வெளிப்படையான மற்றும் காத்திரமான உதவிகளை விரைந்து வழங்குவதற்குரிய திட்டமிடல்களுக்காக" இந்த உச்சிமாநாடு இடம்பெற உள்ளதாக மக்ரோன் தெரிவித்தார்.
இதில் யுக்ரேனிய ஜனாதிபதி செலன்ஸ்கி, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் மற்றும் யுக்ரேனிய ஆதரவான நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
"இந்த தருணம் நாம் ஐரோப்பியர்களாக ஒன்றிணைந்து பெரும் பாய்ச்சல் ஒன்றை நிகழ்த்த வேண்டும்" எனவும் மக்ரோன் குறிப்பிட்டார்.