முட்டை அடை

21 பங்குனி 2025 வெள்ளி 08:50 | பார்வைகள் : 275
பள்ளிக்குச் சென்று வரும் குழந்தைகள் வந்தவுடன் உங்களிடம் ஏதாவது ஸ்னாக்ஸ் ஒன்றை கேட்கிறார்கள் என்றால் அப்பொழுது, கடைகளில் விற்கக்கூடிய தின்பண்டங்களை வாங்கி கொடுக்காமல் புரதம் நிறைந்த முட்டையை வைத்து சுவையான ஸ்னாக்ஸ் ஒன்றை தயார் செய்ய முடியும். அப்படி புரதம் நிறைந்த முட்டை வைத்து நிமிடங்களில் சுவையான அடை எப்படி செய்யலாம் என்பதை தெரிந்து கொள்வோமா...
தேவையான பொருட்கள் :முட்டை - 4, எண்ணெய் - தேவையான அளவு, கறிவேப்பிலை - சிறிதளவு, கொத்தமல்லி இலை - சிறிதளவு, உப்பு - தேவையான அளவுஅரைக்க தேவையானவை :சின்ன வெங்காயம் - 20 - 25, துருவிய தேங்காய் - 3 ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, பொட்டுக் கடலை - 2 ஸ்பூன், சோம்பு - 1 /4 ஸ்பூன், புதினா - சிறிதளவு
செய்முறை :முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய தேங்காய், பொட்டுக் கடலை, பச்சை மிளகாய், சோம்பு, கறிவேப்பிலை, புதினா ஆகியவற்றை சேர்த்து மென்மையாக
அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் முட்டையை உடைத்து ஊற்றி கொள்ளுங்கள்.பிறகு அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அடித்து கலந்துகொள்ளவும்.
தற்போது அடுப்பில் தோசைகல்லை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் முட்டை கலவையை ஒரு கரண்டி ஊற்றி மிதமான தீயில் வேகவிடவும்.ஒருபுறம் வெந்ததும் அடையை திருப்பி மறுபுறமும் கருகாமல் வேகவிடவும். இருபுறமும் நன்கு வெந்தவுடன் எடுத்தால் சுவையான முட்டை அடை பரிமாற ரெடி.இதனை மாலைநேர சிற்றுண்டியாக குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்...