இஸ்ரேலின் பாதுகாப்பு துறை தலைவர் பதவி நீக்கம்…

21 பங்குனி 2025 வெள்ளி 09:11 | பார்வைகள் : 2247
துறை தலைவரை அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி நீக்கம் செய்துள்ளார்.
இஸ்ரேலின் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பான ஷின் பெட்டின்(Shin Bet) தலைவர் ரோனென் பார்-ஐ (Ronen Bar) அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பதவி நீக்கம் செய்துள்ளார்.
அக்டோபர் 7, 2023 திகதியன்று ஹமாஸ் தாக்குதலுக்கு முன் நிகழ்ந்த உளவுத்துறை தோல்விகளைத் தொடர்ந்து, இருவருக்கும் இடையே நம்பிக்கை முறிந்ததாக நெதன்யாகு குற்றம் சாட்டியுள்ளார்.
2021 அக்டோபரில் நியமிக்கப்பட்ட ரோனென் பாரின் ஐந்தாண்டு பதவிக்காலம், வியாழக்கிழமை இரவு இஸ்ரேல் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டு, முன்கூட்டியே முடிவுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் ரோனென் பார் தனது பதவி நீக்கம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று பகிரங்கமாக விமர்சித்துள்ளார்.