Paristamil Navigation Paristamil advert login

விமான எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி - வடகொரியா

விமான எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி - வடகொரியா

21 பங்குனி 2025 வெள்ளி 09:21 | பார்வைகள் : 1097


கிம்மின் மேற்பார்வையில் விமானங்களை எதிர்க்கும் ஏவுகணைகளை வடகொரியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

அமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

11 நாட்கள் வரை இந்த கூட்டு ராணுவ பயிற்சி நடந்தது. ட்ரம்ப் பதவியேற்ற பின் நடந்த முதல் கூட்டு ராணுவ பயிற்சி இதுவாகும்.

இந்த நிலையில், கிம் ஜாங் உன் மேற்பார்வையில் வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது.

இது விமானங்களை எதிர்க்கும் ஏவுகணைகளுக்கான சோதனை ஆகும். இது அந்நாட்டின் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது.
 
மேலும், அமெரிக்கா-தென் கொரியாவின் கூட்டு ராணுவ பயிற்சியின் இறுதிநாளில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வடகொரிய செய்தித் தொடர்பாளர் ஒருவர், அமெரிக்கா மற்றும் தென் கொரியா மீண்டும் இத்தகைய ஆத்திரமூட்டும் செயல்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என தெரிவித்தார்.   

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்