Paristamil Navigation Paristamil advert login

இரவு முழுக்க AC ஓடினாலும் மின்கட்டணம் குறைவாக வர வேண்டுமா?

இரவு முழுக்க AC ஓடினாலும் மின்கட்டணம் குறைவாக வர வேண்டுமா?

21 பங்குனி 2025 வெள்ளி 13:51 | பார்வைகள் : 412


நீண்ட நேரம் AC ஓடினாலும் மின்கட்டணம் குறைவாக வருவதற்குரிய சில டிப்ஸ்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்தியாவில் பல இடங்களில் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. கோடை காலத்தில் அனைவரும் குளிர்ச்சியான இடத்தில் இருப்பதற்கே ஆசை படுவார்கள்.
 
அதற்கு நகரங்களில் வசிப்பவர்கள் முதலில் AC அறையில் இருக்க வேண்டும் என்று தான் எண்ணுவார்கள்.

ஆனால், நீண்ட நேரம் AC ஓடினால் மின்கட்டணமும் தலைசுற்றும் அளவுக்கு வந்துவிடும். அதை எப்படி குறைக்கலாம் என்பதை பார்க்கலாம்.

*ஏசியை எப்போதும் நீங்கள் குறைந்த வெப்பநிலையில் வைக்க கூடாது. பொதுவாக மக்கள் 16 அல்லது 22 டிகிரியில் வைத்தால் குளிர்ச்சியாக இருக்கும் என்று நினைக்கிறார்கள்.

ஆனால், பீரோ ஆஃப் எனர்ஜி எஃபிஷியன்சி (BEE) படி, மனித உடலுக்கு உகந்த வெப்பநிலை 24 டிகிரி தான். இதனால், 24 டிகிரியில் வைத்தால் மின்சாரத்தை சேமிக்கலாம்.

* ஏசியில் நீங்கள் ஒவ்வொரு டிகிரி வெப்பநிலையை அதிகரிக்கும் போதும், 6 சதவீதம் மின்சாரத்தை சேமிக்க முடியும்.

* குளிர் காலத்தில் நீங்கள் ஏசியை பயன்படுத்தாமல் சம்மரில் பயன்படுத்தும் போது மின்சார கட்டணம் அதிகரிக்கும். ஏனென்றால், ஏசியில் தூசிகள் மற்றும் அழுக்குகள் படிந்திருக்கும்.

இதனால், குளிர்ச்சியை தர உங்களது ஏசி நிறைய வேலை செய்ய வேண்டியிருக்கும். இதனால் மறக்காமல் சர்வீஸ் செய்வது அவசியம்.

* நீங்கள் ஏசியை ஆன் செய்வதற்கு முன்பாக அறையின் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி வைத்திருங்கள்.

* ஏசியில் உள்ள ஸ்லீப் மோட் அம்சம் தானாகவே வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை சரிசெய்து கொள்ளும். இதனால், 36 சதவீத மின்சாரத்தை சேமிக்க முடியும்.

* ஏசியுடன் நீங்கள் மின்விசிறியையும் சேர்த்து ஆன் செய்யும் போது அறைகளில் உள்ள மூலைகளிலும் விரைவில் குளிர்ச்சியாகும்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்