Paristamil Navigation Paristamil advert login

மர்மங்கள் தாங்கி நிற்கும் - Bastille மலைக்கோட்டை!

மர்மங்கள் தாங்கி நிற்கும் - Bastille மலைக்கோட்டை!

3 சித்திரை 2017 திங்கள் 10:30 | பார்வைகள் : 18386


பிரான்சின் தென்கிழக்கு சீமையிலே, Auvergne-Rhône-Alpes இல் உள்ள Bastille மலைக்கோட்டை பற்றி தெரியுமா? சொன்னாத்தானே தெரியும் எங்கிறீர்களா..?  சொல்கிறோம்!! 
 
Grenoble நகரத்தில் உள்ள இந்த கோட்டைதான் , இந்த நகரத்தின் பிரதான சுற்றுலாத்தலம் ஆகும். இந்த மலையை காண வருடத்துக்கு ஆறு இலட்சம் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கிறார்கள். கடல் மட்டத்தில் இருந்து 476 மீட்டர்கள் ( 1561 அடி) உயரத்தில் உள்ள பீட பூமி அத்தனை புனிதமானது. அத்தனை பழமையானது. எவ்வளவு பழமை என்றால்...25,000 ஆண்டுகள் பழமையான பீட பூமி ஆகும். 
 
Bastille மலையின் ஒரு பகுதி கடல்முனையை பார்த்துக்கொண்டும், மறுமுனை  Rachais மலையை பார்த்துக்கொண்டும் உள்ளது. முன்னர் ஒரு காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் இங்கிருந்து மேற்கொள்ளப்பட்டன, பீரங்கிகள் எல்லாம் அணிவகுத்து இருந்தன என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மலை உச்சியில் இருந்து பார்த்தால் இத்தாலியின் சில நகரங்கள் தெரியும் என சொல்லப்படுகிறது. நீங்கள் தான் சென்று பார்த்து உறுதி செய்யவேண்டும். Isére நதி இந்த நகரை வளைத்து பாய்கிறது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த மலைக்குச் செல்வதற்கு 'கேபிள் கார்' தான் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஆச்சரியமான தகவல் ஒன்று உள்ளது. இங்கு 1934 ஆம் ஆண்டு இந்த 'கேபிள் கார்' அமைக்கப்பட்டது. உலகின் முதலாவது கேபிள் கார் இதுவாகும். தவிர வேறெங்கும் இல்லாதபடி, வருடத்துக்கு 4000 மணிநேரங்கள் இந்த 'கேபிள் கார்' இயங்குகிறது. 
 
ஆச்சரியம் தான் இல்லையா??

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்