பனிப்பொழிவு மற்றும் பனிவழுக்கல் எச்சரிக்கை!!

22 பங்குனி 2025 சனி 10:34 | பார்வைகள் : 2695
இன்று பிரான்சின் 6 மாவட்டங்களிற்கு பெரும் பனிப்பொழிவு மற்றும் வீதிப் பனிவழுக்கள் (neige-verglas) எச்சரிக்கையை பிரான்சின் வானிலை அவதானிப்பு மையம் வழங்கி உள்ளது.
இன்று முழவதும் பிரான்சின் மையப் பகுதியில் உள்ள இந்த மாவட்டங்களிலும், அயல் மாவட்டங்களிலும், சாரதிகள் அதியுச்ச எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
l'Ardèche, le Cantal, la Loire, la Haute-Loire, la Lozère, le Puy-de-Dôme ஆகிய மாவட்டங்களிற்கு முக்கியமாக இந்த எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.