பரிஸ் : விபத்தை ஏற்படுத்திய சாரதி.. காவல்துறையினர் உட்பட 13 பேர் காயம்!!

22 பங்குனி 2025 சனி 11:17 | பார்வைகள் : 1470
சாரதி ஒருவர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டை மீறி பயணித்து பாரிய விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதில் 10 காவல்துறையினர் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று மார்ச் 21 ஆம் திகதி இரவு இச்சம்பவம் பரிஸ் 15 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது. Boulevard du Montparnasse மற்றும் Rue de Vaugirard வீதிகளுக்கிடையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. காவல்துறையினரின் மகிழுந்துகள் நான்கு மகிழுந்து சாரதி ஒருவரை துரத்திச் சென்றுள்ளனர். இந்நிலையில், நான்கு மகிழுந்துகளும் விபத்துக்குள்ளானது.
இதில் 10 காவல்துறையினர் காயமடைந்துள்ளனர். தப்பிச் சென்ற சாரதியும் பொதுமக்கள் இருவர் என மொத்தம் 13 பேர் காயமடைந்துள்ளனர். விபத்து தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.