வேலை தேடுவோரிற்கான கொடுப்பனவில் மீண்டும் மாற்றம்!!

22 பங்குனி 2025 சனி 11:28 | பார்வைகள் : 2931
வேலையிழந்து chômage இல் இருந்து France Travail இனால் வழங்கப்படும் தொகை முடிவடைந்த பின்னர், தொடர்ச்சியாக 5 வருடங்களாவது வேலை செய்தோரிற்காகப்படும் வாழ்வதார ஒற்றுமை உதவியான ASS (allocation de solidarité spécifique) மீயாய்வு செயயப்பட்டு உதவித்தொகை மாற்றமடைய உள்ளது.
ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து குறைக்கப்படும் அல்லது மாற்றமடையும் பல கொடுப்பனவுகளில் இந்த ASS ம் அடங்குகின்றது.
ஏப்ரலில் இருந்து இந்தத் தொகை ஒரு நாளைக்கு 19,01 யூரோக்களாக நிர்ணயிக்கப்பட்டு 30 நாட்கள் உள்ள மாத்திற்கு 579,90 யூரோக்களும், 31 நாட்கள் உள்ள மாதத்திற்கு 599,23 யூரோக்களும் வழங்கப்பட உள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உதவித்தொகையினை தற்போதைய நிலையில் இன்று மூன்று இலட்சம் பேர் பயனடைகின்றனர் என France Travail தெரிவித்துள்ளது.
இந்த ASS உதிவித் தொகையானது 1984 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.