பிரதமரின் நான்கு அவசரத் திட்டங்கள் - மக்கள் அச்சம்!

22 பங்குனி 2025 சனி 11:48 | பார்வைகள் : 4030
மார்ச் 15ம் திகதியிலிருந்து முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய நான்கு துறைகள் தொடர்பாக பிரான்சின் தற்போதைய பிரதமர் பிரோன்சுவா பய்ரூ, தனது அமைச்சர்களிற்கு ஒரு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
எதிர்வரும் 15ம் திகதி ஏப்ரல் மாதம் முதல் இந்த நான்கு துறைகளில் முக்கிய கவனம் செலுத்தி முக்கிய சீர்திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும் எனப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
கல்வி, சுகாதாரப் பராமரிப்பு மற்றும் வைத்தியம், அதிகாரத்துவத்திற்கான போராட்டம் மற்றும் பொதுமக்கள் நிதியம் ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்தப்படல் வேலண்டும் என, தனது அமைச்சர்களிற்கு, பிரதமர் ஆணை வழங்கி உள்ளார்.
எதிர்க்கட்சிகளின் கேள்விகளிற்கு முகம் கொடுக்கும் முகமாக, இந்த ஆணை அவசரமாகப் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் தங்கள் தலைகளில் மேலும் சுமையாக அமைந்து விடுமோ என்ற அச்சம், இப்பெழுதே மக்கள் மனதில் எழ ஆரம்பித்துள்ளது.