Paristamil Navigation Paristamil advert login

கணவர் மரணிப்பதை இன்ஸ்டாகிராம் நேரலையில் வேடிக்கை பார்த்த மனைவி

கணவர் மரணிப்பதை இன்ஸ்டாகிராம் நேரலையில் வேடிக்கை பார்த்த மனைவி

22 பங்குனி 2025 சனி 14:44 | பார்வைகள் : 312


கணவர் மரணிப்பதை தடுக்க எந்த முயற்சியும் செய்யாமல் மனைவி நேரலையில் பார்த்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம், ரேவா மாவட்டத்தைச் சேர்ந்தவர் 26 வயதான சிவ் பிரகாஷ் திர்பாதி(Shiv Prakash Tripathi).

இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு, பிரியா ஷர்மா(Priya Sharma) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது.

பிரியா ஷர்மாவிற்கு இன்னொரு நபருடன் திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது.

இதனை பின்னர் தெரிந்து கொண்ட அவரின் கணவர் சிவ் பிரகாஷ் திர்பாதியும், திருமண வாழ்க்கை பாதிக்கப்பட கூடாது என கருதி ரகசியமாக வைத்துள்ளார்.

இந்நிலையில், விபத்து ஒன்றை சந்தித்த சிவ் பிரகாஷ் திர்பாதி, ஊன்றுகோல் உதவியுடன் நடக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளார்.

இதனையடுத்து, அவரது மனைவி பிரியா சர்மா தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு, தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அதன் பின்னர் பலமுறை மனைவியை சமாதானப்படுத்தி, மீண்டும் அழைத்து வர அங்கே சென்ற போது, அவர் வர மறுத்து கணவரை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதன் பின்னர் மீண்டும் கடந்த மார்ச் 16 ஆம் திகதி அவரை சமரசம் செய்ய அவரின் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுதும், அவரை அவமானப்படுத்தி தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சிவ் பிரகாஷ் திர்பாதி வீட்டிற்கு சென்று அறைக்கதவை பூட்டிக்கொண்டு, இன்ஸ்டாகிராமில் நேரலையை தொடங்கி தூக்கில் தொங்கி தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.

நேரலையில் 44 நிமிடங்களும் கணவர் மரணிப்பதை பார்த்த மனைவி, அதை தடுக்க எந்த வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

இந்த வீடியோவை பார்த்த சிவ் பிரகாஷ் திரிபாதியின் குடும்பத்தினர், இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், குடும்ப வன்முறை காரணமாகவே அவர் இந்த விபரீத முடிவை எடுத்தது தெரியவந்துள்ளது.

மேலும், அவர் இன்னொரு நபருடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களும் காவல்துறையினருக்கு கிடைத்துள்ளது.

இதையடுத்து, பிரியா ஷர்மா மற்றும் அவரது தாய் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்