Paristamil Navigation Paristamil advert login

இரும்பு மனுஷிக்கு பிறந்தநாள்!!

இரும்பு மனுஷிக்கு பிறந்தநாள்!!

31 பங்குனி 2017 வெள்ளி 10:05 | பார்வைகள் : 18934


அட்டகாசமான நாள் தான். இன்று இரும்பு மனுஷி என அழைக்கப்படும் ஈஃபிள் கோபுரத்துக்கு பிறந்தநாள். இன்று 128வது அகவையில் காலடி எடுத்து வைக்கிறது மனுஷி!! 
 
ஈஃபிள் கோபுரம் குறித்து 'விக்கிபீடியா'வை விட நீங்கள் அதிக தகவல்கள் தெரிந்து வைத்திருப்பீர்கள் என எங்களுத் தெரியும்... இருந்தாலும் சில 'Key points' தகவல்கள் உங்களுக்காக...
 
ஈஃபிள் கோபுரத்தை நிர்மாணித்து முடிக்க இரண்டு வருடங்களும், இரண்டு மாதங்களும் எடுத்துக்கொண்டன. 
 
மார்ச் 15, 1889 ஆம் ஆண்டு கட்டி முடித்துவிட்டு... 15 நாட்கள் கோபுரத்தை திறக்காமல் சும்மா வைத்திருந்தார்கள். உலக வர்த்தக கண்காட்சியில் மார்ச் 31, 1889 (இன்றைய திகதியில்) திறந்து வைத்தார்கள். 
 
உலகம் முழுவதும் உள்ள சுற்றுலாத்தலங்களில் அதிக பார்வையாளர்களை சந்தித்தது 'ஈஃபிள்', உலகின் 72 வீதமான மக்களுக்கு ஈஃபிள் கோபுரம் குறித்த அறிவு உள்ளதாம். 
 
12 யானைகள் எடையுள்ள 'பெயிண்ட்' தேவையாம் இரும்பு மனுஷிக்கு புதிதாக பெயிட் அடிக்க. இதெல்லாம் யாரு கணக்கெடுக்கிறது ஐய்யா?? Société d'Exploitation de la Tour Eiffel (SETE) அமைப்பு பராமரித்து வருகிறது இந்த கோபுரத்தை. 
 
பரிசுக்குள் 'ஈஃபிள்' கோபுரத்தை விஞ்சிய உயரமான கட்டிடம் கட்டுவதற்கு தடை உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா??
 
2015 ஆம் ஆண்டு... ஒரே வருடத்தில் 6.91 மில்லியன் பார்வையாளகர்கள் திரண்டு வந்து திணறடித்தார்கள். பிரெஞ்சு சுற்றுலாத்துறைக்கு 'வருவாய்' என்றால்.. சொல்லி மாளாது. 
 
ஈஃபிள் கோபுரத்தை நிர்மாணிப்பதற்கு ஐந்து இலட்சம் ஆணிகள் பயன்படுத்தப்பட்டது. 'நீ அடிக்கிறது பூரா ஆணிதான்... போய் அடி போ!' என  Gustave Eiffel சொல்லியிருப்பாரோ??
 
மொத்தமாக 72 விஞ்ஞானிகள், கணித வல்லுனர்கள், கட்டிட கலை நிபுணர்கள் இந்த கோபுர கட்டுமானத்தின் போது பணிபுரிந்துள்ளார்கள். அவர்கள் அனைவரது பெயர்களும் ஈஃபிள் கோபுரத்தில் பதிக்கப்பட்டுள்ளது. 
 
இப்படி பல எண்ணற்ற ஆச்சரியத்தகவல்களை தன்வசம் வைத்துக்கொண்டு... பார்பவர்களை எல்லாம் கவர்ந்து இழுக்கிறாள் இந்த இரும்பு அழகி!! உங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்துவிடுங்கள்!!

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்