பாடசாலை ஆரம்பத்திற்கான உதவிப்பணம் அதிகரிப்பு!!

23 பங்குனி 2025 ஞாயிறு 08:31 | பார்வைகள் : 4079
வருடா வருடம் செப்பெடம்பர் மாதம் பாடசாலை மீள் ஆரம்பம் செயயப்படுவதற்கு முன்னர் பாடசாலை உபகரணங்களிற்கான உதவிப்பணம் (PRIME DE RENTRÉE SCOLAIRE) CAF (Caisse d'allocations familiales) இனால் வழங்கப்படும்.
இந்தத் தொகை மீளாய்வு செய்யப்பட்டு 1.7 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகையானது 6 முதல் 18 வயதுவரை வழங்கப்பட்டு வருகின்றது.
6 முதல் 10 வயதுள்ள சிறுவர்களிற்கு 423,48 யூரோக்களும் (இது 2024 இல் 416,40 யூரோக்களாக இருந்துள்ளது)
11 முதல் 14 வயதுள்ள சிறுவர்க்கு 446,85 யூரோக்களும் (இது 2024 இல் 439,38 யூரோக்களாக இருந்துள்ளது)
15 முதல் 18 வயது வரையுள்ள பதின்ம வயதினர்க்கு 462,33 யூரோக்களும் (இது 2024 இல் 454,60 யூரோக்களாக இருந்துள்ளது)
வழங்கப்பட உள்ளது.
15 முதல் 18 வயதுவரை உள்ள மாணவர்களின் கல்வித் தொடர்ச்சிச் சான்றிதழ் CAF தளத்தில் உறுதி செய்யப்படல் வேண்டும்.