பொதுமக்களிற்கு ஆபத்து விளைவிக்கும் மெலோன்சோன் - உள்துறை அமைச்சர்!!

23 பங்குனி 2025 ஞாயிறு 09:41 | பார்வைகள் : 2076
நேற்று ஜோன்-லுக்-மெலொன்சோனின் கட்சியான La France insoumise கட்சி நடாத்திய இனவாதத்திற்கும் தீவிர வலதுசாரிகளிற்கும் எதிரான போராட்டத்தில், காவற்துறையினரைக் கேவலப்படுத்கும் பதாகைகளும் யூத எதிர்ப்பு வாதப் பதாகைளும் தாங்கிக் கோசங்கள் போட்டமை, வெட்கக்கேடான செயல் என உள்துறை அமைச்சர் புரூனோ ரத்தையோ (Bruno Retailleau) கண்டித்துள்ளார்.
நேற்றைய பேரணியை ஒழுங்கு செய்த ஜோன்-லுக்-மெலொன்சோன் அவர்களிற்கான பாதுகாப்பையும், அன்றாடம் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் காவற்துறையினரைக் கேவலப்படுத்தி பதாகைகளை உருவாக்கி உள்ளார்.
அதனுடன் மிகவும் மோசமான யூத எதிர்ப்பு வாசகங்களையும் உருவாக்கி பெரும் கேவலமான செய்லைச் செய்துள்ளார்.
அதனுடன் பிரான்சின் அரசு இஸ்லாமிய எதிர்ப்பு வாதம் உடையது என்ற கருத்தையும் தெரிவித்து, பொதுமக்கள் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தி உள்ளார்
என மிகவும் கண்டிப்பான தொனியில் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.