Paristamil Navigation Paristamil advert login

Carrousel du Louvre - சில தகவல்கள்!!

Carrousel du Louvre - சில தகவல்கள்!!

28 பங்குனி 2017 செவ்வாய் 10:30 | பார்வைகள் : 18700


இந்த பெயர் கடந்த வாரம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டதே என யோசிக்கிறீர்களா?? கடந்த வாரத்தில் பயங்கரவாதி ஒருவனை இராணுவத்தினர் சுட்டுக்கொன்றார்களே... அதேதான்! பரிசில் உள்ள மிக முக்கியமான 'வணிக வளாகம்!' (Shopping mall) இதுவாகும்!!
 
பரிசின் 1 ஆம் வட்டாரத்தில், லூவர் அருங்காட்சியகத்துக்கு கீழே உள்ளது இந்த வளாகம். பிரான்சில் பல்வேறு வணிக வளாகங்களை நிறுவி வரும் Unibail-Rodamco நிறுவனத்துக்குச் சொந்தமானது இந்த Carrousel du Louvre. 
 
1993 ஆம் ஆண்டு, ஒக்டோபர் 15 ம் திகதி ஒன்ற கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. 30 க்கும் மேற்பட்ட கடைகள், உணவகங்கள் என ஒரு சிறந்த 'ஷொப்பிங்' அனுபவம் இங்கே கிடைக்கும். பரிசின் முதலாவது அப்பிள் நிறுவனத்தின் கிளையும் இங்கேதான் திறந்துவைக்கப்பட்டுள்ளது. 
 
உலகில் அதிகம் விற்பனையான  The Da Vinci Code நாவலில் மிக முக்கிய பங்கு வகித்த La Pyramide Inversée  இங்கு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தமுறை செல்லும் போது மறக்காமல் பார்வையிடுங்கள்!!
 
10,200 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தில் Sephora, Esprit, Apple Store, Mariage Frères Tea Emporium, Plaisirs de Paris, Swarovski, Perigot, Le Tanneur மற்றும் Fossil போன்ற மிக முக்கிய நிறுவனங்களின் கிளைகள் உள்ளன. 
 
99 Rue de Rivoli, 75001 Paris முகவரியில் அமைந்துள்ள இந்த வணிக வளாகம் காலை 10 மணி முதல் இரவு 8 மணிவரை திறந்திருக்கும்!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்