தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து அணி

23 பங்குனி 2025 ஞாயிறு 12:10 | பார்வைகள் : 163
பே ஓவலில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 4வது டி20யில் வெற்றி பெற்று, நியூசிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியது.
நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி பே ஓவல் மைதானத்தில் நடந்தது.
முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 220 ஓட்டங்கள் குவித்தது. ஃபின் ஆலன் 20 பந்துகளில் 50 ஓட்டங்களும், பிரேஸ்வெல் 26 பந்துகளில் 46 ஓட்டங்களும் விளாசினர்.
தொடக்க வீரர் டிம் செய்பெர்ட் 22 பந்துகளில் 44 ஓட்டங்கள் குவித்தார். பின்னர் களமிறங்கிய பாகிஸ்தான் அணி சீட்டுக்கட்டுபோல் சரிந்தது.
அப்துல் சமாத் மட்டும் 44 ஓட்டங்கள் விளாசினார். ஏனைய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேறியதால் பாகிஸ்தான் 105 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இதன்மூலம் 115 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்ற நியூசிலாந்து டி20 தொடரையும் கைப்பற்றியது.