திருமணம் செய்வதால் பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?

23 பங்குனி 2025 ஞாயிறு 12:59 | பார்வைகள் : 343
திருமண வாழ்க்கை என்பது அனைவரின் வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமானதாகும். காதல் திருமணமோ அல்லது நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதுவாக இருந்தாலும் திருமணம் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் திருப்பு முனையாக இருக்கும். ஏனெனில் ஒருவரின் வாழ்க்கையின் பிற்பகுதி அவர்களின் துணையுடன்தான் கழிகிறது.
தற்போது திருமணம் என்பது தேவைற்ற உறவு என்ற கருத்து என்ற பிரபலமாகி வருகிறது. இது முழுக்க முழுக்க அவர்களின் தனிப்பட்ட நம்பிக்கை சார்ந்தது. ஆனால் திருமணம் என்பது வெறும் உணர்வுகள் சார்ந்தது மட்டுமல்ல, அதில் பல ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளன.
உண்மைதான் திருமணத்திற்கு பிறகு தம்பதிகள் இருவருக்குமே பொறுப்புகளும், சுமைகளும் அதிகரிக்கும். ஆனால் அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். ஆனால் அது முழுக்க முழுக்க அவர்களுக்கு கிடைக்கும் வாழ்க்கைத்துணையைப் பொறுத்தது என்பதை மறந்து விடக்கூடாது. ஒரு நல்ல வாழ்க்கைத்துணை கிடைத்தால் அதன்மூலம் பெண்களுக்கு குறிப்பிட்ட நன்மைகள் கிடைக்கும். அந்த நன்மைகளைப் பற்றி விளக்குகிறார் திருமண கவுன்சிலர் பிரியங்கா.
ஆரோக்கியம் திருமணத்திற்குப் பிறகு ஒரு பெண்ணின் ஆரோக்கியத்திலும், உடலமைப்பிலும் பல நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். அவர்களின் வாழ்க்கையின் அனைத்து விஷயங்களும் மாற்றமடையும். நல்ல உணவு மற்றும் உடலுறவு மூலம் பெண்களின் உடலில் பல ஹார்மோன் மாற்றங்கள் நிகழ்கின்றன, இது அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. தாய்மை அடைதல் பெரும்பாலான பெண்களின் முக்கிய கனவுகளில் ஒன்று தாய்மை அடைவது. திருமணம் ஒரு பெண்ணுக்கு தாயாக இருப்பதன் மகிழ்ச்சியைத் தருகிறது. ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது பெறும் மகிழ்ச்சியை ஒருவர் ஆண்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அதேசமயம் திருமண முறிவால் குழந்தையை தனி ஆளாக வளர்க்கும் பெண்களின் துயரமும் மிகவம் கொடுமையானது என்பதை மறந்து விடக்கூடாது. தாய்மையின் முழு இன்பத்தை அனுபவிக்க சிறந்த கணவர் இருக்க வேண்டியது அவசியம்.
உணர்வுரீதியான பாதுகாப்பு தங்கள் மீது தடையில்லா அன்பு செலுத்தவும், முழுவதும் புரிந்துகொள்ளவும் அனைவருக்குமே யாராவது ஒருவர் தேவை குறிப்பாக மென்மையான ஆளுமை கொண்ட பெண்களுக்கு அது அவசியம் தேவை. திருமண உறவு என்பது ஒரு பெண்ணுக்கு அவர் சார்ந்து பேசக்கூடிய அவர்களுக்கே சொந்தமான ஒரு நபரை வழங்குகிறது. திருமணம் மூலம் அவர்களுக்கு எப்போதும் ஆதரவான ஒருவர், சாய்ந்த அழுவதற்கு ஒரு தோள்பட்டை மற்றும் எப்போதும் தன் அருகில் இருக்கக்கூடிய ஒருவர் கிடைக்கிறார். அவர்களின் அம்மாவுக்குப் பிறகு பெண்கள் முழுமையாக நம்பக்கூடிய ஒருவரென்றால் அது அவர்களின் கணவர்தான்.
நிதிரீதியான பாதுகாப்பு பெற்றோர் தங்கள் மகளுக்கு எந்த குறையும் வைப்பதில்லை என்றாலும், ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு, ஒரு பெண் தன் பெற்றோர் தனக்காகச் செலவிடுவதை விரும்புவதில்லை. திருமணமான பிறகு அவர்களுக்கென்று ஒரு கணவர் இருக்கிறார், அவர்களுக்காக செலவுகளைச் செய்ய உரிமை உண்டு. ஒரு பெண் தன் தந்தையிடம் கேட்கவோ சொல்லவோ முடியாத விஷயங்களை தன் கணவரிடம் கேட்கலாம். காலப்போக்கில் நிதிரீதியான ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம், ஆனால் அவர்களின் பிரச்சினைகளை சொல்வதற்கு அப்போதும் அவர்களுக்கு ஒரு கணவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையுடன் இருப்பார்கள். பெண்கள் சுயமாக சம்பாதிப்பவராக இருந்தாலும் அவர்களின் கணவர்கள் கொடுக்கும் முக்கியத்துவமும், பரிசுகளும் எப்போதுமே பெண்களுக்கு ஸ்பெஷல்தான்.
இல்லத்தரசி பெண்கள் எவ்வளவுதான் அம்மா வீட்டில் செல்லமாக வளர்க்கப்பட்டாலும், அவர்கள் அந்த வீட்டில் ஒரு குடும்ப உறுப்பினர் மட்டும்தான். ஆனால் திருமணமான பின் அவர்களின் வீட்டிற்கு அவர்கள்தான் குடும்பத்தலைவி. அந்த வீட்டில் எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவும் அவர்களால் எடுக்கப்படுகிறது. திருமணத்திற்குப் பின்புதான், ஒரு பெண் தனக்கென ஒரு வீட்டைப் பெறுகிறார், மேலும் அவர்களுக்கு முடிவெடுக்கும் சுதந்திரத்தை வழங்குகிறது. மேற்கொண்ட நன்மைகள் திருமண உறவால் கிடைக்கும் நன்மைகளில் வெகுசில மட்டுமே. ஆனால் ஒரு திருமணம் மகிழ்ச்சியான மற்றும் வெற்றிகரமான திருமணமாக மாறுவதில் அவர்களின் கணவரின் பங்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் தவறான வாழ்க்கைத்துணையுடன் வாழ்வது நரகத்தை விட மோசமானது என்பதை மறந்து விடக்கூடாது.