பரிஸ் : குழு மோதல்.. கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் படுகாயம்!!

23 பங்குனி 2025 ஞாயிறு 14:33 | பார்வைகள் : 10526
பரிஸ் 13 ஆம் வட்டாரத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற குழு மோதல் ஒன்றில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
அங்குள்ள Olympiades மெற்றோ நிலையத்துக்கு அருகே Rue Charles Moureu வீதியில் இந்த குழு மோதல் வெடித்துள்ளது. இளைஞர்கள் பலர் இரு குழுக்களாக பிரித்து ஒருவரை ஒருவர் தாக்கி மோதலில் ஈடுபட்டிருந்தனர். அதன் போது, 24 வயதுடைய ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்த நபர் அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பரிசில் கடந்த சில மாதங்களாக இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது. கடந்த மார்ச் 19 ஆம் திகதி பரிஸ் 16 ஆம் வட்டாரத்தின் René-Cassin உயர்கல்வி பாடசாலைக்கு அருகே இடம்பெற்ற தாக்குதலில் மாணவன் ஒருவன் காயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025