Paristamil Navigation Paristamil advert login

மூன்று பிள்ளைகளைக் கொன்ற கொடூர தாய்.. !!

மூன்று பிள்ளைகளைக் கொன்ற கொடூர தாய்.. !!

23 பங்குனி 2025 ஞாயிறு 16:00 | பார்வைகள் : 2534


மூன்று பிள்ளைகளைக் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கொடூர மனநிலை கொண்ட பெண் ஒருவரைக்க் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் பிரான்சின் மத்திய மாவட்டமான Indre நகரில் இடம்பெற்றுள்ளது. அங்கு வசிக்கும் பெண் ஒருவர் கடந்த மார்ச் 14 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். அவர் கடந்த 2012 தொடக்கம் 2020 ஆம் ஆண்டுவரையான காலத்தில் அவரது மூன்று பிள்ளைகளைக் கொன்றுள்ளார்.

Celon எனும் சிறிய பின் தங்கிய கிராமத்தில் வசிக்கும் குறித்த பெண், மூன்று முறை கர்ப்பம் தரித்து, ரகசியமாக குழந்தை பெற்றெடுத்ததுடன், குழந்தைகளை கொன்று வீட்டின் பின்னால் உள்ள தோட்டத்தில் புதைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது,. 

2012-2015-2020 ஆம் ஆண்டுகளில் இச்சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. 2020 ஆம் ஆண்டில் இடம்பெற்ற இறுதிச் சம்பவம் தொடர்பில் சந்தேகம் கொண்டு விசாரணைகளை ஆரம்பித்த காவல்துறையினருக்கு, அதன் பின்னரே இந்த தொடர் கொலைகள் தொடர்பில் தெரியவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்