Paristamil Navigation Paristamil advert login

அண்ணாமலைக்கு சிறப்பான அரசியல் எதிர்காலம் உள்ளது: சொல்கிறார் பவன் கல்யாண்

அண்ணாமலைக்கு சிறப்பான அரசியல் எதிர்காலம் உள்ளது: சொல்கிறார் பவன் கல்யாண்

24 பங்குனி 2025 திங்கள் 12:09 | பார்வைகள் : 1500


ஐ.பி.எஸ்., ஆக இருந்த அண்ணாமலை தமிழகத்தை வழிநடத்த தகுதியானவர். அவருக்கு சிறப்பான அரசியல் எதிர்காலம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன் என ஆந்திர துணை முதல்வரும், ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண் தெரிவித்தார்.

இது குறித்து தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் பவன் கல்யாண் கூறியதாவது:

* ஹிந்தி தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை.

* ஒரு நடிகராக இருந்துவிட்டு உடனடியாக முதல்வர் ஆக முடியாது. அப்படி நடப்பது அரிதிலும் அரிது.

* அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வலிமையான தலைவர்.

* எம்.ஜி.ஆர்., தோற்றுவித்த அ.தி.மு.க., கட்சி சிறப்பாக இருக்க வேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அ.தி.மு.க., வந்தால் மகிழ்ச்சி. தே.ஜ., கூட்டணியில் ஏற்கனவே பொருந்திய கட்சி அ.தி.மு.க., மீண்டும் பொருந்தலாமே.

* மீண்டும் தேசிய ஜனநாயக கட்சியுடன் அ.தி.மு.க., கூட்டணி வைப்பது நடக்கலாமே.

* தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை பாலோ செய்து வருகிறேன். அவர் மிகச்சிறந்த தலைவர். ஐ.பி.எஸ்., ஆக இருந்த அண்ணாமலை தமிழகத்தை வழிநடத்த தகுதியானவர். அவருக்கு சிறப்பான அரசியல் எதிர்காலம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன்.

*பல தி.மு.க., எம்.பி.,க்கள் ஹிந்தியில் பேசுகிறார்கள். ஆனால் பொதுமக்கள் முன் வந்து ஹிந்தியை எதிர்க்கிறார்கள். கண்மூடித்தனமாக எதிர்ப்பதை நான் விரும்பவில்லை.

* காலம் மாறிவிட்டது. தேசிய கல்வி கொள்கை ஹிந்தியை திணிக்கவில்லை.ஆனால் திணித்தால் நானே எதிர்ப்பேன்.

இவ்வாறு பவன் கல்யாண் கூறியுள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்