CAF : ஏப்ரல் முதல் கொடுப்பனவு அதிகரிப்பு!!

24 பங்குனி 2025 திங்கள் 07:00 | பார்வைகள் : 7893
Revenu de solidarité active (RSA) கொடுப்பனவுகள் வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்பட உள்ளது.
1.7% சதவீதத்தால் அதிகரிக்கப்பட உள்ளதாக (Caisse d'allocations familiales - CAF) அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 2 மில்லியன் குடும்பங்கள் இதில் பலனடைய உள்ளனர். சென்ற ஆண்டு 4.6% சதவீதத்தினால் கொடுப்பனவு அதிகரித்ததை அடுத்து, தற்போது மீண்டும் இந்த தொகை அதிகரிக்க உள்ளமை மகிழ்ச்சியான செய்தியாகும்.
இந்த அதிகரிப்பை அடுத்து தனி ஒரு நபருக்கான கொடுப்பனவு €646.52 ஆக உயர்வடைகிறது.
குடும்பத்தலைவர்களில் ஒருவரை மட்டும் கொண்டு இரண்டு பிள்ளைகளை கொண்ட குடும்பத்தினருக்கு (famille monoparentale de deux enfants) €1,163.73 யூரோக்களும்,
குடும்பத்தலைவர்களில் இருவரையும், இரண்டு பிள்ளைகளையும் கொண்ட குடும்பத்தினருக்கு (un couple avec deux enfants) €1,357.68 யூரோக்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.