சல்மான்கானிடம் அடி வாங்கும் சத்யராஜ்..

24 பங்குனி 2025 திங்கள் 07:16 | பார்வைகள் : 283
"சிக்கந்தர்" படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, வருகிற மார்ச் 30ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது. தற்போது வெளியான இந்த டிரைலர், சல்மான் கானின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள், ராஷ்மிகா மந்தனாவின் ரொமான்ஸ் சீன்கள், சத்யராஜின் வில்லத்தனமான தோற்றம், பிரம்மாண்டமான பாடல்கள், காஜல் அகர்வால் சிறப்பு தோற்றம் என ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த திரைப்படம், சுமார் 200 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியா முழுவதும் 5000 திரையரங்குகளில் வெளிவரவுள்ள இந்த படம், IMAX திரையரங்குகளிலும் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது.
சல்மான் கானின் திரையுலக வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்பமாக இந்த படம் அமையும், அதேசமயம் ஏ.ஆர். முருகதாஸிற்கும் பாலிவுட்டில் புதிய வாய்ப்புகளை பெற்றுத்தரும் வெற்றி படமாக இருக்கும் என்று ரசிகர்கள் உறுதியாக நம்பி வருகின்றனர்.