Paristamil Navigation Paristamil advert login

சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல்: அண்ணாமலை கண்டனம்

சவுக்கு சங்கர் வீட்டின் மீது தாக்குதல்: அண்ணாமலை கண்டனம்

24 பங்குனி 2025 திங்கள் 14:19 | பார்வைகள் : 1005


தி.மு.க., அரசு ஊழல் செய்திருக்கிறது என்பதைக் கூறியதற்காக, சவுக்கு சங்கர் வீடு மீது நடத்தப்படும் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம் என தமிழக பா.ஜ., அண்ணாமலை கூறியுள்ளார்.

துப்புரவு தொழிலாளிகள் என்று கூறிக் கொண்டு 50 பேர் கொண்ட கும்பல் நானும் என் தாயாரும் குடியிருக்கும் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது என யூடியூபர் சவுக்கு சங்கர் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கை:

தி.மு.க., ஆட்சியின் ஊழலையும், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாத கையாலாகாத் தனத்தையும் குறித்துப் பேசுபவர்கள் மீது, வழக்கு தொடர்வது, நள்ளிரவில் போலீசாரை அனுப்பி மிரட்டுவது, குண்டாஸ் வழக்கில் கைது செய்வதென தொடர்ந்து அராஜகப் போக்கில் ஈடுபட்டு வருகிறது தி.மு.க., அரசு.

தி.மு.க., அரசு ஊழல் செய்திருக்கிறது என்பதைக் கூறியதற்காக, சவுக்கு சங்கர் மீது நடத்தப்படும் இந்த வன்முறையைக் கடுமையாகக் கண்டிக்கிறோம். ஒருவர் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து, சுமார் மூன்று மணி நேரம் கடந்தும், காவல்துறை இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றால், யாருடைய தூண்டுதலின் பெயரில் இது நடக்கிறது என்பதை உணர முடிகிறது.

ஆட்சியாளர்களின் இந்த அராஜகப் போக்கு தொடர்வது நல்லதல்ல. இதன் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்