ஐபிஎல் 2025- ஹர்பஜன் சிங் வர்ணனையில் இனவெறி சர்ச்சை! ரசிகர்கள் கொந்தளிப்பு

24 பங்குனி 2025 திங்கள் 10:00 | பார்வைகள் : 767
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் குறித்து வர்ணனையாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்த கருத்து இனவெறி சர்ச்சையில் சிக்கியுள்ளது.
2025 இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் வர்ணனையாளராக களமிறங்கிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்து, சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
ஆட்டத்தின் வர்ணனையின்போது, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரின் மோசமான பந்துவீச்சை "லண்டன் கருப்பு டாக்ஸி" (London Black Taxi) உடன் ஒப்பிட்டு, ஹர்பஜன் சிங் கூறிய கருத்து, இனவெறி விமர்சனத்தை தூண்டியுள்ளது.
அதில், லண்டனில் கருப்பு டாக்சி மீட்டர் வேகமாக ஓடுவது போல, ஆர்ச்சரின் ஓவர்களும் வேகமாக ஓடி ஓட்டங்களை வாரி வழங்கியது" என்று அவர் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஹர்பஜன் சிங் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், இதுவரை அவர் எந்தவித விளக்கமும் அளிக்கவில்லை.
இந்த போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிகபட்சமாக 286 ஓட்டங்கள் குவித்து சாதனை படைத்துள்ளது.
இஷான் கிஷன் மற்றும் டிராவிஸ் ஹெட்டின் அதிரடியான ஆட்டம் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 242 ஓட்டங்கள் எடுத்தும் தோல்வியை தழுவியுள்ளது.
இந்த போட்டியில் ஜோஃப்ரா ஆர்ச்சர் 4 ஓவர்களில் 76 ஓட்டங்கள் கொடுத்து, ஒரு விக்கெட் கூட எடுக்காமல் மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.