பீல்டிங் செய்யும் போது நெஞ்சு வலி - ஆபத்தான நிலையில் பிரபல கிரிக்கெட் வீரர்

24 பங்குனி 2025 திங்கள் 10:09 | பார்வைகள் : 595
பிரபல கிரிக்கெட் வீரர் தமீம் இக்பாலுக்கு மைதானத்தில் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.
வங்கதேச கிரிக்கெட் அணியின் பிரபல துடுப்பாட்ட காரரான தமீம் இக்பால்(Tamim Iqbal), அந்த அணிக்காக 70 டெஸ்ட், 243 ஒருநாள் போட்டிகள் மற்றும் 78 டி20 போட்டிகளில் விளையாடி 15,249 ரன்களை குவித்துள்ளார்.
மேலும், வங்கதேச அணிக்காக 25 சதங்களை அடித்துள்ளார். 2020 முதல் 2023 வரை வங்கதேச ஒருநாள் கிரிக்கெட் அணியின் அணித்தலைவராக செயல்பட்டார்.
அதன்பின்னர், 2023 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றாலும், உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வரும் அவர், தற்போது, வங்கதேசத்தில் நடைபெற்று வரும், Dhaka Premier League தொடரில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற முகமதியன் ஸ்போர்டிங் கிளப் மற்றும் ஷைன்புகூர் கிரிக்கெட் கிளப் இடையேயான போட்டியின் போது தமீம் இக்பால் பீல்டிங் செய்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனடியாக, ஹெலிகாப்டர் மூலம் அவரை டாக்காவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஆனால் ஹெலிகாப்டரில் கொண்டு செல்ல அவரது ஒத்துழைக்காத நிலையில், சவார் நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதயநோய் இருப்பதை உறுதிப்படுத்தினர். தொடர்ந்து அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மைதானத்தில் நெஞ்சுவலி ஏற்பட்ட சம்பவம் சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.