பன்னீர் டிக்கா

24 பங்குனி 2025 திங்கள் 14:56 | பார்வைகள் : 329
பன்னீரில் நம் உடலுக்குத் தேவையான முக்கிய சத்துக்களான பாஸ்பரஸ், புரதச்சத்து, கார்போஹைட்ரைட், கொழுப்பு அதிகமாக இருப்பதால் நாம் அதனை உட்கொள்ளும்போது அதன் முழுப்பலனை பெற முடியும். இத்தகைய பன்னீரில் டிக்கா செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் வாங்க...
தேவையான பொருட்கள்: பனீர் - 250கிராம், பூண்டு - 2-3, உப்பு - தேவையான அளவு, மிளகாய் தூள் - 1/4 டீ ஸ்பூன் (காரத்திற்கு ஏற்ப பயன்படுத்தவும்), மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை, சீரக தூள் - 1/4 டீஸ்பூன், என்ணெய் -தேவையான அளவு
பனீர் சிறிய துண்டுகளாக நறுக்கவும். பூண்டு தேவையெனில் இஞ்சி சேர்த்து இரண்டையும் விழுதாக்கவும். இப்போது ஒரு பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் சேர்த்து அதில், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மிளகாய் பொடி, சீரக தூள், மஞ்சள் தூள் சிறிதளவு எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்றாக கலக்கவும்.
இப்போது இந்த கலவையில் பனீர் துண்டுகளை சேர்த்து நன்றாக கலக்கவும். பனீர் உடையாக இருக்க வேண்டும். இதை 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
இப்போது, அடுப்பில் கடாய் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றவும். இப்போது மசாலா கலவை செய்து வைத்துள்ள பனீர் துண்டுகளை சேர்க்கவும். பனீர் பொன்னிறமானதும் எடுத்தால் பனீர் டிக்கா தயார்.