சோனாவின் போராட்டம் காரணமாக பெப்சி யூனியன் அலுவலகம் அருகே பரபரப்பு !

24 பங்குனி 2025 திங்கள் 15:01 | பார்வைகள் : 478
நடிகை சோனா, பெப்சி யூனியன் முன் திடீரென உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நடிகை சோனா, "ஸ்மோக்" என்ற வெப் தொடரை தயாரித்த நிலையில், அந்த வெப் தொடரின் ஹார்ட் டிஸ்கை அவரது மேனேஜர் கைப்பற்றி வைத்துக் கொண்டதாகவும், பணம் கொடுத்தால் தான் அதை வழங்குவேன் என்று கூறியதாகவும், சோனா தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து, அவர் 40 ஆயிரம் கொடுத்திருந்த நிலையில், அப்போதும் ஹார்ட் டிஸ்கை வழங்கவில்லை என்றும், கூடுதலாக மேலும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வேண்டும் என்று கேட்டதாகவும், தன்னை அலைக்கழிப்பதாகவும், தனக்கு தொலைபேசியில் பேசும் போது நக்கலாக பதில் சொல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
"கடந்த ஒரு வருடமாக அந்த ஹார்ட் டிஸ்கை வாங்க நான் போராடிவிட்டேன். ஆனால் என்னால் முடியவில்லை. அதனால் தான் இப்போது பெப்சி யூனியன் முன் தர்ணா போராட்டத்தில் உட்கார்ந்திருக்கிறேன். எனக்கு என்னுடைய ஹார்ட் டிஸ்க் வேண்டும்!" என்று சோனா வலியுறுத்தினார்.
"இன்று முழுவதும் எனக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றால், இரவு வீட்டுக்கு சென்று, நாளை காலை மீண்டும் வந்து போராட்டத்தில் உட்காருவேன்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சோனாவின் போராட்டம் காரணமாக பெப்சி யூனியன் அலுவலகம் அருகே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவரது பிரச்சினை முடிவுக்கு வருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.