கனடாவில் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
25 பங்குனி 2025 செவ்வாய் 03:33 | பார்வைகள் : 2410
சென் கத்தரின்ஸ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து போலீசார் கொலை விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கார்ல்டன் வீதி மற்றும் அத்லோன் பிளேஸ் அருகே (குவீன் எலிசபெத் வேயின் அருகில்) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்திற்கான சூழ்நிலை தெளிவாக தெரியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், எந்த சந்தேகத்தையும் போலீசார் இதுவரை வெளியிடவில்லை, மேலும் ஒருவர் கூட கைது செய்யப்படவில்லை.
விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதால், சம்பவ இடத்தில் அதிக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


























Bons Plans
Annuaire
Scan