Paristamil Navigation Paristamil advert login

Orange S.A. தொலைத்தொடர்பு சேவை!! - சில தகவல்கள்!!

Orange S.A. தொலைத்தொடர்பு சேவை!! - சில தகவல்கள்!!

13 பங்குனி 2017 திங்கள் 11:30 | பார்வைகள் : 18841


பிரெஞ்சு புதினத்தில் முன்னர் SFR தொலைத்தொடர்பு சேவை குறித்து பார்த்திருந்தோம்... ஒன்று பிரான்சில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட Orange S.A. தொலைத்தொடர்பு சேவை குறித்து பார்க்கலாம்! 
 
பிரான்ஸ் தவிர்த்து மேலும் பல ஐரோப்பிய நாடுகளிலும் கால்பதித்து சிறந்த தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கி வருகிறது Orange S.A. நிறுவனம். உலகம் முழுவதும் 256 மில்லியன் வாடிக்கையாளர்கள் கொண்டுள்ளது. பிரெஞ்சு தொலைத்தொடர்பு சேவைகளில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட நிறுவனம் இதுவாகும். மேலும் பிரான்சில் 95,000 பணியாளர்களும், உலகம் முழுவதும் 59,000 பணியாளர்களும் இந்த நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள். மொத்தமாக 157,000 பணியாளர்கள். (2015 ஆம் ஆண்டில்..) 
 
நிறுவனம் 1988 ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. 29 வருடங்களை நிறைவு செய்யும் Orange S.A. நிறுவனம், தற்போது தொலைபேசி 
Landline telephone, Mobile telephone, Fixed internet, Mobile internet, IP television, IT services, Livebox போன்ற வசதிகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 
 
பிரான்சில் முதல்தர இணைய வழங்குனர்களாக இருக்கும் Orange S.A. நிறுவனம்,  ருமேனியா, ஸ்லோவாகியா, பிரித்தானியா ஆகிய நாடுகளிலும் முதல் தரம் வகிக்கிறது. தவிர பெல்ஜியம், போலாந்தில் இரண்டாம் இடத்திலும், ஸ்பெயினில் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றது. 
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்